வகுப்பறையில் ஆறு மாத கருவுடன் ரத்த கோலத்தில் சடலமாக கிடந்த மாணவி
இந்தியாவில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி படிக்கும் மாணவி வகுப்பறையில் ரத்தக்கோலத்தில் அருகில் ஆறு மாத கருவுடன் இறந்துக்கிடந்துள்ளார்.
நெல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 19 வயதுடைய மாணவி பி.டெக் இரண்டாம் ஆண்டில் படித்து வந்த குறித்த மாணவி கடந்த 11 ஆம் திகதி யாரும் இல்லாதபோது வகுப்பறையின் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்துள்ளார்.
நீண்ட நேரம் சென்றும் மாணவி வெளியில் வராத காரணத்தால் சக மாணவிகள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்ததில் மாணவி ரத்தப்போக்குடன் சடலமாகக் கிடந்துள்ளார். மேலும் அவரின் அருகில் ஆறு மாதமான கரு கிடந்துள்ளது.
இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கருக்கலைப்பினால் மரணமடைந்தாரா அல்லது யூடியூப் போன்ற சமூக வலைத்தளம் பார்த்துக் கருக்கலைக்க முயற்சி செய்து மரணமடைந்தாரா என்ற கோணங்களில் பொலிஸாரினால் விசாரணை மேற்கொண்டு வரப்படுகின்றது.
முதற்கட்ட விசாரணையின் போது மாணவியின் கைத்தொலைபேசி கைப்பற்றப்பட்டு அதிலிருந்து கிடைத்த தகவலின்படி மாணவிக்கும் அனந்த சாகரம் பகுதியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்