சஜித் பிரேமதாசவின் வேட்பு மனு தாக்கல்: மட்டக்களப்பில் கொண்டாட்டம்

-களுவாஞ்சிகுடி நிருபர்-

எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரமதாஸ இன்று வியாழக்கிழமை கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ததை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் கொண்டாடியுள்ளனர்.

பட்டிருப்பு தொகுதியில் குருக்கள் மடம் பிரதான காரியாலயத்தியே இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஐ.ம.சக்தியின் மாவட்ட தலைவரும் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட முகாமைபாளர் சிறீஸ்குமார் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயலாளர் ஜோன் கெனத் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

மேலும் பிரதேச அமைப்பாளர்கள் பிரச்சார அமைப்பாளர்கள் மகளீர் அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஊடக அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்