சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் பண்பாட்டுப் பெருவிழா

சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தைத்திருநாள் பண்பாட்டுப் பெருவிழா நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.

நெல் அறுவடை செய்து கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலிருந்து பண்பாட்டு பவனியாக சென்று மகிழடித்தீவு கலாசார மண்டபத்தை அடைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வழிபாடு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கோலம்போடுதல், தேவாரம் பண்ணோடு பாடுதல், பூமாலை புனைதல், குருத்துப் பின்னுதல், கிராமியப் பாடல் போன்ற பல்வேறு போட்டி நிகழ்வுகளுடன் கலை ஆற்றுகையும் சிறப்புப் பட்டிமன்றமும் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அருகிவரும் தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு விடயங்களை புத்துயிர்பெறச் செய்யும் நோக்கில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.