சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

-யாழ் நிருபர்-

யாழ் – வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன் போது வீதி, சுகாதாரம், கால்நடைகள், விவசாயம், கல்வி, கடல் வளம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விடயங்கள் பேசப்பட்டதுடன் தீர்வு திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ பவானந்தராஜா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார், திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொலிசார், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

  • Beta

Beta feature