-யாழ் நிருபர்-
சங்கானை கோட்ட முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழாவானது நேற்றையதினம் சனிக்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மைதான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் பரிசில்கள் வழங்கல் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வானது நிறைவுற்றது.
சங்கானை கோட்டக்கல்வி முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவி திருமதி ப.கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் விருந்தினர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.