க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்றைய தினம் புதன் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி நிறைவுபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைகளின் பெறுபேறுகள், விரிவுரையாளர்களின் பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது என அவர் தெரிவித்தார்.