கோணேஸ்வரத்திலிருந்து பாத யாத்திரை

-மூதூர் நிருபர்-

திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்தில் இருந்து வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஷ்தானத்தை நோக்கி புறப்பட்டு வந்த பாத யாத்திரியர்கள் மூதூர் -கிளிவெட்டி பகுதியை இன்று செவ்வாய்கிழமை வந்தடைந்தனர்.

கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான இவ் பாத யாத்திரை 11 ஆம் திகதி வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தை சென்றடையவுள்ளது.

இப் பாத யாத்திரையில் 73 சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பாத யாத்திரையில் ஈடுபட்டோர் அரோகரா கோசத்துடன் வேல் பாடல்களை பாடிச் சென்றதையும் காணமுடிந்தது.

அத்துடன் சின்ன கதிர்காமம் என்று அழைக்கப்படும் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப் பாத யாத்திரை 11 ஆம் திகதி வெருகலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.