கோட்டாவின் முக்கியஸ்தர் இராஜினாமா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார அந்த பதவியை செவ்வாய்க்கிழமை  இராஜினாமா செய்தார்.

தனது இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு செவ்வாய்க்கிழமை  அனுப்பி வைத்துள்ளதாக பண்டார தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்சவின் கீழ் பணிபுரிந்தபோதும் தவிர்க்க முடியாத காரணங்களாலும் அவர் மீதான மரியாதையாலும் தனிச் செயலாளர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக முன்னாள் ஜனாதிபதிக்கு பண்டார எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய் நாட்டிற்கும் அங்கு வாழும் சகோதர மக்களுக்கும் சேவை செய்வதே தனது ஒரே நோக்கம் எனக் கூறும் பண்டார, வெல்ல முடியாத நாட்டை உருவாக்குவதற்கான புதிய அரசியல் வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

தாய்நாட்டை பெருமையுடன் மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய அணியுடன் இணைந்து செயற்படத் தயங்கப் போவதில்லை எனவும் அவர் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்