கொஸ்கமயில் துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்

கொழும்பு – கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய தாயும் அவரது 12 வயது மகளும், 44 வயதுடைய மற்றொரு ஆணும் காயமடைந்துள்ளனர்.

சுதுவெல்ல பகுதியில் முச்சக்கர வண்டியில் காயமடைந்த 3 பேரும் பயணித்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் பிஸ்டல் வகை துப்பாக்கியால் துப்பாக்கிசூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்ய கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.