கொழும்பை வந்தடைந்தது எம்பியன்ஸ் சொகுசு கப்பல்

எம்பியன்ஸ் என்ற சொகுசு கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

1,131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளது.

அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாட்டு பயணிகள் அந்த கப்பலில் வருகைத்தந்துள்ளனர்.

குறித்த கப்பலில் வருகைத்தந்த பயணிகள் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு செல்லவுள்ளனர்.

இந்த கப்பல் இன்று இரவு மாலைத்தீவு நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்