கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரீ-56 துப்பாக்கி மீட்பு

கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட ர்P-56 இயங்கு நிலையில் இருந்த துப்பாக்கி மீட்கப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது.

67 வயதுடைய பெண் ஒருவர் தனது வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான தோற்றமுடைய பையை வைப்பதை பாதுகாப்பு அதிகாரி கவனித்ததை அடுத்து, பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.