
கொழும்பில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி
தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநபர் உயிரிழந்துள்ளார்.
கோரம்பே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று காலை தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரும் அவருடைய நண்பர்களும் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
