கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், மேல் மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.
தாழ்வான வளிமண்டலக் குழப்பம் காரணமாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலும் இன்று மழை தொடரும் என முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கனமழையுடன் திடீர் வெள்ளம், பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.









