
1991ஆம் ஆண்டு புக்கரெஸ்டில் இடம்பெற்ற கொலைக்காக சர்வதேச அளவில் தேடப்படும் இலங்கையர் ஒருவர் 19 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க ஏப்ரல் 23ஆம் திகதி ருமேனியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளார் என ருமேனியா நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 23ம் திகதி குறித்த இலங்கையர்கள் ஜெர்மனியிலிருந்து ருமேனியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
நாடு கடத்தப்பட்டதன் பின்னர் குறித்த இலங்கையர் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 53 வயதான குறித்த நபர் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 1991 இல் குறித்த நபர் ஒரு வெளிநாட்டு பிரஜையை கொலை செய்தார், அதன் பிறகு இறந்த நபரை கட்டி, புக்கரெஸ்டில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ஒரு கம்பளத்தில் போர்த்தி எடுத்து சென்று, அவரை க்ராங்காசி சுற்றுப்புறத்திற்கு கொண்டு சென்று மோரி ஏரியில் வீசினார்.
இந்தக் குற்றத்திற்காக அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று பொலிஸ் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், குறித்த நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அந்த நபர் ஜேர்மனியில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், ருமேனிய பொலிஸ் ஜேர்மன் பொலிஸாருடன் இணைந்து குறி;த குறித்த நபரை ஜெர்மனியின் மோயர்ஸில் ஜனவரி 3 அன்று கைது செய்தது.
நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தண்டனையை அனுபவிக்க தனி நபர் சிறையில் அடைக்கப்படுவார் என ருமேனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
