“கொலைகார அரசாங்கம்” என நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய அர்ச்சுனா!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், தனக்கு பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒதுக்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனக்கு எதிராக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார், அவற்றில் எதுவும் தனிப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவை அல்ல எனவும் தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், வடக்கிற்குச் சென்று வருவதற்கு தனக்கு பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கம் பொறுப்பேற்குமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தனக்கு ஏன் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஜேவிபியின் கடந்த காலத்தை குறிப்பிட்டு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஒரு கொலைகார அரசாங்கம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க