கொட்டாஞ்சேனை சிறுமி உயிரிழந்த சம்பவம் – சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்த கருத்து
கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தின் குற்றவாளி யார் என தமக்குத் தெரியும் என்று பாடசாலை நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் பல வழிகளில் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சம்பவம் தொடர்பான ஆவணங்களையும், ஆதாரங்களையும் உரிய நிறுவனங்களுக்கு வழங்குமாறும் தெரிவித்தார்.
பாடசாலை நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்