கொட்டகலையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சகல தடைகளையும் நீக்கும் கடவுளான விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி, கொட்டகலையில் மேளதாளம் முழங்க ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விநாயகர் ஊர்வலம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
குறிப்பாக பத்து இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு, தோட்ட ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து, கொட்டகலை பிரதேச சபை ஊடாக பிரதான வீதியில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொட்டகலை ஆற்றங்கரைக்கு ஊர்வலம் சென்றடைந்தது, பின்னர் ஒவ்வொரு சிலைகளாக ஆற்றில் கரைக்கப்பட்டது.
இதன் போது அங்கு விசேட பூஜைகள், பஜனை, சிறப்பு சொற்பொழிவுகள் என்பனவும் நடைபெற்றது.
குறித்த விநாயகர் சதுர்த்தி விழாவிலும் பிள்ளையார் ஊர்வலத்திலும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.