கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் பலி: ஐவருக்கு விளக்கமறியல்

ஹட்டன்- மஸ்கெலியாவில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலிய – காட்மோரிலுள்ள பாடசாலை வளாகத்திற்குள் அனுமதியின்றி கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த கொங்ரீட் வளையம் சரிந்து 11 வயதான மாணவன் உயிரிழந்ததுடன், சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காட்மோரிலுள்ள பாடசாலையொன்றில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட கொங்ரீட் வளையம் சரிந்ததில் அதற்குள் சிக்கி கடந்த வியாழக்கிழமை மாணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலிய பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்