கைவிட்டப்பட்டது சுகாதாரத்துறை பணிப்பகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் ஒரு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயல் செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, சேவைகள் நாளை வியாழக்கிழமை வழக்கம் போல் தொடரும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக கலந்துரையாடல் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளை குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.