கேரள பெண்களின் அழகின் இரகசியம்

 

கேரளா என்று சொன்னாலே அனைவருக்கும் முதலில் தோன்றுவது அங்கு இருக்கும் பெண்கள் தான். காரணம் அவர்களின் அழகு.

இவர்கள் பெரும்பாலும் அதிக கூந்தல், கொழுத்த அழகான கண்ணங்கள், குழிகள் விழும் சிரிப்பு, வெள்ளையான சருமம் போன்ற தோற்றத்தை தான் அழகு என்று சிலர் கூறுவார்கள்.

அந்தவகையில் கேரள பெண்கள் தங்களது முகத்தை எப்படி அழகாக வைத்துக்கொள்கிறார்கள் என நாம் இந்த பதிவில் பார்போம்.

நீளமான கருங்கூந்தல்

இவர்கள் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் ஷாம்புவிற்குப் பதிலாக சீகைக்காயை பயன்படுத்துவார்கள்.

பொடுகை தடுப்பதற்கு

பொடுகு வராமல் இருப்பதற்கு இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தலை முடி கழுவார்கள்.

 

சரும அழகிற்கு

சருமம் மென்மையாக இருப்பதற்கு தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். குறிப்பாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவார்கள்.

 

தினமும் பயன்படுத்தும் முகப்பொடி

 

தேவையான பொருட்கள்

1.பச்சை பயறு – 100 கிராம்

2.முட்டை வெள்ளைக்கரு – 2

செய்முறை

முதலில் பச்சை பயரை காய வைத்து எடுத்துக்கொள்ளவும். பின் இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்தக்கொள்ளவும்.

அடுத்து அதை ஒரு தட்டில் பரப்பி வெளியில் காயவைக்கவும். அதை இரண்டு நாட்களுக்கு காய வைத்து, ஒரு கரண்டியில் கிளறிக் கொண்டும் இருக்கவும்.

பின் அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து பவுடர் போன்று அரைத்து எடுக்கவும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்