
கேப்பாப்பாப்பிலவு காணி உரிமையாளர்களுக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் இன்று வியாழக்கிழமை வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்ல கலந்துரையாடல் கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பில் காணி உரிமையாளர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் இன்றைய தினம் இவ்வாறு ஆளுநரைச் சந்தித்தனர். தமது பிரச்சினைகள் குறித்து ஆராய்வதாக ஆளுநர் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
