கெஹெலியவின் மகள் பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரீ ஜயனிகா ரம்புக்வெல்ல பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை காவலிலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான போது கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும் நேற்றைய தினம் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போது பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமையின் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.