கெஹலியவிற்கு தொடர் விளக்கமறியல்

தரமற்ற மருந்து இறக்குமதி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 7 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட் கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆம் மற்றும் 11 ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்