கூரிய ஆயுதத்தை காட்டி முச்சக்கரவண்டி அபகரிப்பு

கொழும்பு – மொரகஸ்முல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை அபகரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதியிடம் கூரிய ஆயுதத்தை காட்டி அச்சுறுத்தி 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முச்சக்கர வண்டியை அபகரித்துச் சென்றுள்ளதுடன் இவர் அபகரித்த முச்சக்கர வண்டியுடன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்