கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு!

கொழும்பு – டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயங்களுடன் இன்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரது நிரந்தர வதிவிட முகவரி இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.