குவைத்தில் வாகன விபத்தில் இலங்கை பணிப்பெண் உயிரிழப்பு

குவைத்தில் 21 வயது இளைஞரின் அஜாக்கிரதையினால் 59 வயதான இலங்கையை நேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த 21 வயது  இளைஞர், தனது வாகனத்தை எடுக்கும் போது அது கட்டுப்பாட்டை இழந்து, இலங்கையிலிருந்து சென்று குவைத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் பெண் ஒருவர் மீது மோதியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது குறித்த வாகனத்தில் மோதுண்ட பெண் உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் கவனக்குறைவால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை குவைத் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள், ஜஹ்ரா மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டிய 18 சிறார்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்