
குழந்தைகளை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த நாய்
இந்தியாவின் தமிழ் நாட்டில் தன்னை வளர்த்து வந்தவரின் குழந்தைகளை பாம்பிடமிருந்து காப்பாற்றிய நாய் இறுதியில் உயிரை விட்டமை குடும்பத்தாரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கழுவந்தோண்டி கிராமத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அருகில் இருந்த முந்திரி தோப்பில் இருந்து 6 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று வந்துள்ளது.
இதனைப் பார்த்த வளர்ப்பு நாய் “ஹென்றி” அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை தன் காலால் தள்ளியும், குலைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி விட்டு பின்னர் நீண்ட நேரம் போராடி பாம்பைக் கடித்துக் குதறி விட்டு மயங்கி விழுந்துள்ளது.
நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்த, நாயின் உரிமையாளர், மயங்கிக் கிடந்த நாயைக் கால்நடை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார். நாயைப் பரிசோதித்த மருத்துவர் நாய் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
12 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல வளர்த்து வந்த நாய், குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

