
குளிர்பானம் அருந்திய தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதி
பலாங்கொடை – கிரிதிகல பகுதியில் உள்ள உணவகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பான போத்தலொன்றை நுகர்வு செய்து அருந்திய தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரியை சேர்ந்த 40 வயதான தந்தையும் 9 வயதான மகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளிர்பானத்தை அருந்தியதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.