குளியலறையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து நேற்று திங்கட்கிழமை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்லூரி வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது – 60) என்பவரே இவ்வாறு அவரது வீட்டு குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று காலை குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள், குறித்த நபர் குளியலறையில் சடலமாக இருப்பதை அவதானித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மானிப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்