குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி
புஸ்ஸலாவை – மெல்போர்ட் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார்.
பெருந்தோட்டப் பகுதியில் தொழில் புரிந்த 8 பேர் குளவி கொட்டு இலக்கான நிலையில் வைத்தியசாலை அழைத்துச் செல்லப்பட்ட போது ஒருவர் உயிரிழந்தார்.
ஏனைய 7 பேரில் 6 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன் ஒருவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக வெளகப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மெல்போர்ட் தோட்டப்பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
