குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

பசறை லுணுகலை ஹொப்டன் யப்பாம தனியார் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யப்பாம தனியார் தோட்டத்தில் தொழிலுக்கு சென்ற போது குளவிக்கொட்டுக்கு இலக்கான குறித்த நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்