
குளத்தில் மிதந்த ஆணின் சடலம்
வவுனியா – நெளுக்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றில் இருந்து, இன்று புதன் கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாகச் சென்ற நபரொருவர், குளத்தினுள் சடலம் மிதப்பதனை அவதானித்து பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குளக்கட்டின் மேற்பகுதியில் காலணிகள் காணப்படுவதால் இந்தச் சம்பவம் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில், தடயவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
