
குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
புத்தளம் மதுரங்குளி பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து நேற்று முன் தினம் புதன் கிழமை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மதுரங்குளி, ரந்தியாகம பகுதியை சேர்ந்த கிறிஸ்தோபர் சாமர பிய கெலும் (வயது – 43) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுரங்குளி – முருகன் கோயிலுக்கு பின் பக்கமாக உள்ள சிறிய குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மேலும் குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
