
குப்பிவிளக்கினால் பதவியை இழந்தார் பேச்சாளர்
மாணவர்கள் குப்பிவிளக்யை பயன்படுத்தி கல்வி கற்பதை பழகவேண்டும் என்ற கருத்தை தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார் என்பதை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனை உறுதி செய்துள்ளார்.
இலங்கை மின்சாரசபையின் பேச்சாளரின் கருத்துக்களில் தொழில்சார் தன்மையோ அல்லது இரக்கமோ கருணையோ இல்லாததை பல அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சாரசபை பேச்சாளரின் கருத்துக்கள் இலங்கை மின்சாரசபையினதோ அல்லது அரசாங்கத்தினதோ நிலைப்பாடுகளை பிரதிபலிக்கவில்லை இருந்தும் அவரின் கருத்துக்காக நான் மின்சாரசபையின் சார்பில் மன்னிப்பை கோருகின்றேன் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
