குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

தாண்டிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று புதன்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒயார்சின்னக்குளம் பகுதியை சேர்ந்த பாலசிங்கம் சுரேஸ் (வயது – 58 ) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரவு உணவருந்திவிட்டு நித்திரைக்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.

புதன்கிழமை இரவு தூக்கத்தில் இருந்து கண் விழித்த மனைவி கணவனை நீண்ட நேரம் காணாததால் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த போது வீட்டின் முன்புறமாகவுள்ள வேம்பு மரத்தில் தூக்கில் தொங்குவதை அவதானித்துள்ளார்.

பின்னர் அயல் வீட்டாரின் உதவியுடன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் மற்றும் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்