
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள், தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி இன்று சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த கவனயீர்ப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன், அல்அக்சா ஜூம் ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இருந்து அஷ்ரப் நகர் வயல் வீதி வரை பேரணியாக சென்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
