குச்சவெளியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இனூஸின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்ற வேளையில், கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, பாரிய காயங்களுக்குள்ளான இனூஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் நேற்று முன் தினம் புதன் கிழமை இரவு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் காயங்களுக்குள்ளாகி உடல் நிலை தேறிவரும் இனூஸை சுகம் விசாரித்து அவருக்கான நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர் முத்து முஹம்மத் மற்றும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.