கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் மட்டு.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் பாராட்டி கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய சாதனையாளர்கள் பாராட்டு விழாவில் மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆசிரிய சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வானது பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்