
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கிய வாக்குறுதியையடுத்து மட்டக்களப்பில் கடந்த பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
மட்டு ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் 12.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போதே போராட்டத்தை தாங்கள் தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட பட்டங்களை பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் தங்களுக்கு அரச வேலைவாப்புகளை வழங்குமாறு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
