கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று புதன்கிழமை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் கலந்து கொண்டு வைத்தியசாலையின் சில வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார்.

இதன்போது சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி சிவலிங்கம் உட்பட வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்