கிழக்கு ஆளுநரால் சித்திரை புத்தாண்டு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு

-மூதூர் நிருபர்-

மூதூர் -கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் ஆரம்ப நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது முதல் நிகழ்வாக பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமிழர் கலாச்சார நடனங்களுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண ஆளுநரின் சேவையினை பாராட்டி ஏற்பாட்டு குழுவினரால் நினைவுச் சின்னமும் பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக மூதூர் பிரதேச செயலாளர் ,பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டு கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மரதன் ஓட்டம் ,படகோட்டம், வழுக்கு மரம் ஏறுதல், கயிறிழுத்தல், சைக்கிளோட்டம், சங்கீத கதிரை, முட்டியுடைத்தல், பலூனுடைத்தல், மிட்டாய் உண்ணுதல், சங்கீதக் கதிரை, நீச்சல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிட தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்