கிழக்கில் “சுத்தமான கடற்கரை” : புதிய ஆளுனர்
புதிய கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கிராமச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், இளைஞர் மற்றும் விளையாட்டுக் கழகம் மற்றும் தன்னார்வலர்களின் ஆதரவுடன் 426 கிலோமீற்றர் நீளமான கடற்கரையை ஒரே தடவையாக சுத்தப்படுத்திய “சுத்தமான கடற்கரை” என்ற திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த உலகம் மனித குலத்துக்கான இடம் மட்டுமல்ல அனைத்து கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை கடற்கரையில் கொட்டுவது கடும் கண்டனத்துக்குரியது. கடற்கரையோரங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, மீண்டும் மீண்டும் கடற்கரையில் குப்பை கொட்டும் உணவகங்களுக்கு வர்த்தக உரிமத்தை நீட்டிக்க கூடாது என உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் கடல்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி, சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும். அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஆதரவுடன் நான் 100% நம்பிக்கையுடன் இருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் கிழக்கு கடற்கரை தூய்மையான கடற்கரையாக இருக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்