கிளி.பளையில் விதை தென்னந்தோட்டத்தை ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவின் தர்மக்கேணி பகுதியில் விதை தென்னந்தோட்டத்தை,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன.

சர்வதேச தென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ம் திகதி கொண்டாடப்படுகிற நிலையில், சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கே.வி. சமந்த வித்யாரத்ன, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.