
கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் நெத்தலியாற்றம் கரைதனில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலித்து வரும் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஒத, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தேர்த்திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றுது
இதில் பக்தர்கள் புடைசூழ சுவாமி ஊர்வலம் வந்தார்.
