கிளிநொச்சியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது!

கிளிநொச்சி ஏ-9 வீதியால் இன்று வெள்ளிக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீர்னு தீப்பற்றி எரிந்தது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்ட போதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் பொலிசார், தீயை அணைத்து பின்னரே அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.