
கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வுப் பணி முன்னெடுப்பு
கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை புதையல் தேடி அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. அகழ்வு பணியின்போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிசார், சிறப்பு அதிரடிபடையினர் முன்னிலையில் இருந்தனர்.
இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியான பணி நாளை ஞாயிற்றுக்கிழமை 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



