கிராமப்புற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கிராமப்புற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன், பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.