கிரான் குடும்பிமலை ஸ்ரீ குமரன் ஆலயத்துக்கான பாதயாத்திரை ஆரம்பம்
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கிரான் குடும்பிமலை ஸ்ரீ குமரன் ஆலயத்துக்கான பாதயாத்திரை செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற குடும்பிமலை ஸ்ரீ குமரன் ஆலய வருடாந்த திருவிழா நாளை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் இடம்பெறவுள்ளதுடன் நாளை இரவு மகா யாகமும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் பாத யாத்திரை செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து பல ஆலயங்களை தரிசித்து நாளை குறித்த ஆலயத்தினை சென்றடையும்.
பாதயாத்திரையில் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.