கிண்ணையடி மில்லர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த சித்திரை விளையாட்டு விழா போட்டி 2023

-கிரான் நிருபர்-

 

மட்டக்களப்பு கிண்ணையடி மில்லர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த சித்திரை புத்தாண்டு கலை கலாச்சார விளையாட்டு விழா, கழக தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில் கிண்ணையடி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வின் அதிதிகள் கிண்ணையடி மில்லர் விளையாட்டு கழக உறுப்பினர்களினால் வரவேற்கப்பட்டதுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் மற்றும் கோ.பாமதீசன் மனிதாபிமான செயற்பாட்டு முகாமையாளர் சர்வதேச SAVE THE CHILDREN அமைப்பு ருமேனியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சிறைச்சாலை அத்தியட்சகரினால் தேசிய கொடியினை ஏற்றி விளையாட்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேசத்தில் பழமையான விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான மில்லர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த சித்திரைப் புத்தாண்டு கலை கலாச்சார விளையாட்டு விழாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நிகழ்வுகளாக வழுக்கு மரம் எறுதல், தலையணை சமர், தடை தாண்டல் மற்றும் சூப்பியில் பால் குடித்தல் இன்னும் பல நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதன் போது, இவ் நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதிகள்,  பல உலக நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளிலும் இவ் சித்திரை புத்தாண்டு கலச்சார விழா நடைபெறுவதாகவும் வேறு வேறு பெயர்களில் இவ் விழாவினை அழைப்பதாகவும், சித்திரை மாதம் என்றாலே கொண்டாட்டம் நிறைந்த மாதம் என்றும்  தெரிவித்தனர்.

இவ் கழகம் பழைய கழகம் என்றும், முன்பு கலைவாணி விளையாட்டு கழகம் எனும் பெயரில் இருந்ததாகவும், பின்பு 1990ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து மில்லர் விளையாட்டு கழகம் என்று பெயர் மாற்றம் செய்து இன்றும் அதே பெயரில் இயங்குவது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந் நிகழ்வில், கிராம அபிவிருத்தி சங்கங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.அகிலேஸ்வரன், விளையாட்டு உத்தியோகத்தர் க.சங்கீதா மற்றும் ஆலய பிரதமகுரு, கிண்ணையடி ஆலயங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.