கிண்ணியா மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் உடனான கலந்துரையாடல்
-கிண்ணியா நிருபர்-
கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய நேற்று சனிக்கிழமை அமைச்சர் கிண்ணியா பிரதேசத்துக்கு சென்று மீனவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார்.
இதன்போது திருகோணமலை கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் இஷார தரிந்து கண்காணம்கே, சுருக்கு வலை சங்க தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சேருவில தொகுதி அமைப்பாளருமான சரத் லோரன்ஸ், முன்னாள் நகர சபை உறுப்பினர் கலிபதுள்ளாஹ், கிண்ணியா மீனவ மகா சங்க தலைவர் ரிஜால் பாயிஸ், பைரூஸ், ஆரிஸ் உள்ளிட்ட மீனவ சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்